--- --:--:-- --

15 வயது சிறுமியை திருமணம் செய்த 19 வயது இளைஞன்! சிறுமியின் தாயார் அளித்த புகார்!

42

1111111திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே 15 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்று திருமணம் செய்ததாக 19 வயது இளைஞனை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

 

காந்தி நகரைச் சேர்ந்த விஸ்வநாதன் என்ற இளைஞன் அதே பகுதியை சேர்ந்த சிறுமியுடன் பழகி வந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே சிறுமியுடன் அவரது குடும்பத்தினரை வாடிப்பட்டி விவசாய வேலைக்காக சென்று விட்ட நிலையில் அங்கு சென்ற விஸ்வநாதன் யாருக்கும் தெரியாமல் சிறுமியை அழைத்துச் சென்று கோவிலில் வைத்து தாலி கட்டி திருமணம் செய்ததாக சொல்லப்படுகிறது.

 

இதுகுறித்து சிறுமியின் தாய் அளித்த புகாரின்பேரில் இளைஞனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon