--- --:--:-- --

கொரோனாவால் தனியார் தொலைக்காட்சி ஊழியர் வேல்முருகன் உயிரிழப்பு..!

1

தமிழகத்தில் கொரோனாவால் தனியார் தொலைக்காட்சி ஊழியர் உயிரிழந்துள்ளார். சென்னை அம்பத்தூரை சேர்ந்த வேல்முருகன் தேனாம்பேட்டையில் உள்ள தனியார் தொலைக்காட்சியில் செய்திப்பிரிவு ஒளிப்பதிவாளராக பணியாற்றி வந்தார். 40 வயதான அவருக்கு கடந்த 15 நாட்களுக்கு முன்பு கொரொனா தொற்று ஏற்பட்டது.

 

ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வேல்முருகன் சிகிச்சை பலனின்றி அதிகாலை உயிரிழந்தார். சென்னையில் மட்டும் ஊடகத் துறையை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு கொரொனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் முதல் முறையாக ஒருவர் உயிரிழந்திருப்பது ஊடகத்துறையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒளிப்பதிவாளர் வேல்முருகன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள திமுக தலைவர் ஸ்டாலின் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon