--- --:--:-- --

பீகாரில் இடி மின்னல் தாக்கியதில் 83 பேர் உயிரிழப்பு..!

4.1

பீகார் மாநிலத்தில் இடி, மின்னல் தாக்கியதில் 83 பேர் உயிரிழந்ததாக மாநில பேரிடர் மேலாண்மை துறை தகவல் அளித்துள்ளது. உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா 4 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் நிதிஷ்குமார் தகவல் அளித்துள்ளார்.

 

கடந்த இரண்டு மூன்று நாட்களாகவே தொடர்ந்து இடி, மின்னல் மழை என்று வட மாநிலங்களில் தொடர்ந்து கொண்டுள்ளது. சில இடங்களில் ஆலங்கட்டி மழையும் பெய்துள்ளது. இப்படிப்பட்ட நிலையில், பிஹாரில்முன்பு எப்போதும் இல்லாத அளவாக 83 பேர் ஒரே சமயத்தில் உயிரிழந்துள்ளனர்.

 

இத்தகைய சூழலில் உயிரிழந்தவர்களுக்கு நிவாரணம் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்றுக்கொண்ட முதலமைச்சர் நிதிஷ்குமார் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா 4 லட்சம் ரூபாய் நிவாரணம் அளிக்கப்படும் என தெரிவித்திருக்கிறார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon