--- --:--:-- --

ஜூலை 31ஆம் தேதி வரை பொது முடக்கம் நீட்டிப்பு – மம்தாபானர்ஜி

1

மேற்கு வங்க மாநிலத்தில் வருகிற ஜூலை 31-ஆம் தேதி வரை பொது முடக்கம் நீட்டிக்கப்படுவதாக மம்தா பானர்ஜி அரசு அறிவித்துள்ளது. கொரொனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ள நிலையில் மேற்கு வங்கத்தில் 14 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

 

இந்த சூழலில் மேற்கு வங்கத்தில் அடுத்த மாதம் 31ஆம் தேதி வரை பொது முடக்கத்தை நீட்டிப்பதாக அரசு அறிவித்துள்ளது. ஜூலை 31 வரை பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் செயல்படாது என்றும் ரயில் மற்றும் மெட்ரோ சேவைகள் இயங்காது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

மாநிலத்தில் கொரொனா நிலவரம் குறித்து அனைத்து கட்சி தலைவர்களுடனும் ஆலோசனை நடத்திய பிறகு மம்தா பானர்ஜி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon