--- --:--:-- --

தடை செய்யப்பட்ட பகுதிக்குள் மது கடையால் பொது மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்!

0.2

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா திருவாடானை அருகே பாண்டுகுடி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 42, 45 வயது மதிக்கத்தக்க இரு ஆண்களுக்கும் 65 வயதுடைய முதியவர் என மூன்று நபர்களுக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து இந்த பகுதி சுகாதாரத் துறை கட்டுப்பாட்டில் கொண்டு வந்து அடைக்கப்பட்டு தடை செய்யப்பட்ட பகுதியாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

 

இந்த தடை செய்யப ப்பட்ட பகுதியில் மதுக்கடை உள்ளது. அதனால் தடை செய்யப்பட்ட பகுதிக்குள் மது வாங்க மது பிரியர்கள் தடைகளை தாண்டி பல கிராமங்களில் இருந்து பல்வேறு நபர்கள் வந்து செல்வதால் மேலும் கொரோனோ வைரஸ் பரவி விடுமோ என்ற அச்சத்தில் மக்கள் உள்ளனர். இந்த பகுதியில் கடைகள் அனைத்தும் அடைக்கப் பட்டுள்ள நிலையில் மதுக்கடை மட்டும் திறந்திருப்பது அச்சமாக உள்ளது.

மேலும் இந்த பகுதியில் மதுக்கடை திறப்பதற்கு முன்பு திருட்டுதனமாக மது விற்பதால் காலை 6 மணி முதலே பல்வேறு கிராமத்தினர் வந்து செல்வதாகவும் அதையும் தடுக்க வேண்டும் மேலும் இந்த மதுக்கடையை அகற்ற கோரிக்கை வைத்தனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon