--- --:--:-- --

மதுரை மாவட்டத்தில் நாளை நள்ளிரவு 12 மணி முதல் முழு பொதுமுடக்கம் அமலுக்கு வருகிறது..!

3

மதுரை, வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலையில் கொரொனா பரவல் அதிகரிப்பால் முழு முடக்கத்தை அமல்படுத்த அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் கொரொனா தொற்று அதிகரிப்பால் மதுரையில் பொது முடக்கம் அமலுக்கு வருகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

முழு பொது முடக்கம் என்பது மதுரை மாநகராட்சி உள்ளிட்ட பகுதிகளில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடைய தமிழக அரசாணையை பொருத்தவரை 23ம் தேதியிலிருந்து பொது முடக்கம் அமலுக்கு வரும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

 

எனவே அதற்கு சிறு விளக்கமும் அளிக்கப்பட்டு நாளை நள்ளிரவு முதல், 24ஆம் தேதி நள்ளிரவு 12 மணி முதல் தான் இந்த பொது முடக்கம் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே பொதுமக்கள் யாரும் கடைகளுக்கு உடனே செல்ல வேண்டாம் என்று தமிழக அரசு விளக்கத்தை அளித்துள்ளது.

 

நாளை நள்ளிரவு 12 மணி முதல் 30ம் தேதி வரை இந்த பொது முடக்கம் என்பது மதுரை மாநகராட்சி உள்ளிட்ட பகுதிகளில் அமலில் இருக்கும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon