திருவாடானை அருகே தனியார் மில்லில் சம்பளம் வழங்காததை கண்டித்து தொழிலாளர்கள் முற்றுகைப் போராட்டம்!
திருவாடானை அருகே சின்ன கீரமங்கலத்தில் தனியார் மில் இயங்கிவருகிறது. இங்கு 100க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்களும், 40 நிரந்தர தொழிலார்களும், 80 க்கு மேற்பட்ட தற்காலிக தொழிலாளர்களும் என பல நூறு தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
கொரொனா வைரஸ் பரவலை தடுக்கும் பொருட்டு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நடை முறையில் இருந்ததால் மில் மூடப்பட்டது. இங்கு பணியாற்றும் தொழிலாளர்களும் வேலை இழந்தனர்.
இருந்தும் மத்திய மாநில அரசுகள் தனியார் மில்லில் வேலை பார்க்கு தொழிலாளர்களுக்கு ஏப்ரல், மே மாதங்களுக்கும் சேர்த்து சம்பளம் வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்நிலையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்த நாளில் இருந்து இன்று வரை எவ்வித சம்பளமும் வழங்காமல் காலம் தாழ்த்தி வருகிறார்கள். இது குறித்து இந்த மில் தொழிலாளர்கள் நிர்வாகத்திடம் பலமுறை கூறியும் இதுவரை அவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

நிர்வாகம் குறித்தும், சம்பளம், வழங்காதது குறித்து திருவாடானை தாசில்தார், திருவாடானை காவல் கண்காணிப்பாளருக்கு புகார் மனு கொடுத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால், தொழிலாளர்களின் குடும்பங்கள் பசி, பட்டினியால் வாடி வருவதாகவும், இதே நிலை நீடித்தால் தங்களது குடும்பங்கள் பட்டினியால் இறக்க நேரிடும் என்றும் கவலை தெரிவித்தார்கள்.
இன்று நிர்வாகத்தை அனுகிய போது உள்ளே செல்ல மறுத்ததால் மில் கேட்டின் முன்பு முற்றுகையில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து நிர்வாக முதலாளியிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்ததை தொடர்ந்து கலைந்து சென்றனர். இதற்கும் நிர்வாகம் செவி சாய்க்காத பட்சத்தில் தொடர் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தார்கள்.






