--- --:--:-- --

யோகா தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர்!

5

கொரோனா நோயிலிருந்து விடுபட யோகா சிறந்த வழிமுறையாக திகழ்கிறது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். யோகா தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் சர்வதேச அளவில் ஒற்றுமையாக பறைசாற்றுவதற்கான நாளாக இது அமைந்துள்ளது எனக் கூறினார்.

 

இந்த ஆண்டு குடும்பத்துடன் வீட்டில் இருந்தபடியே யோகா செய்யுங்கள் என தெரிவித்த மோடி உங்களது வாழ்வில் ஒரு அங்கமாக யோகாவை செய்து பழகுங்கள் என கேட்டுக்கொண்டார்.

 

யோகாவின் பலன்களை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நாடு தற்போது உணர்ந்து இருப்பதாகவும் இருந்து மீண்டு வர யோகா செய்யுங்கள் எனவும் தெரிவித்தார். யோகாவிற்கு மதம், மொழி, நாடு என எந்த பேதமும் இல்லை என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon