--- --:--:-- --

திருப்பூர் மாவட்டத்தில் வங்கி அதிகாரி போல் நடித்து பணத்தை கொள்ளையடித்த நபர்!

7.1

திருப்பூரில் வங்கி அதிகாரி போல் பேசி கிரெடிட் கார்டு விவரங்களை பெற்று பொருட்களை வாங்கி மோசடி செய்த நபர் காவல்துறையில் சிக்கியுள்ளார்.

 

திருப்பூரில் ஆர்வி‌இ நகரைச் சேர்ந்த பெருமாள் என்பவரின் வங்கி அதிகாரி போல பேசி கிரெடிட் கார்டின் 16 இலக்க எண், காலாவதி தேதி, சிசிவிஎன் ஆகியவற்றைப் பெற்றுக் கொண்ட அடையாளம் தெரியாத நபர் அவற்றை பயன்படுத்தி சுமார் 33 ஆயிரம் ரூபாய்க்கு பொருட்களை வாங்கி மோசடி செய்துள்ளார்.

 

இதுதொடர்பாக விசாரணை நடத்தி வந்த திருப்பூர் சைபர் கிரைம் காவல்துறையினர் சேலத்தை சேர்ந்த தினேஷ் என்பவரை கைது செய்தனர். அவருடன் தொடர்ந்து நடத்திய விசாரணையில் சென்னை, கோவை உள்ளிட்ட பல பகுதிகளில் வங்கி அதிகாரிகள் பேசி மோசடி செய்ததை ஒப்புக் கொண்டதாக தெரிகிறது. அவரிடமிருந்து 13 சிம் கார்டுகள் 4 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon