--- --:--:-- --

ஒரு கும்பலால் தாக்கப்பட்டு உயிரிழந்த நபருக்கு கொரொனா தொற்று உறுதி!

6.1

சென்னையில் 10 நபர்களால் கடுமையாக தாக்கப்பட்ட இளைஞர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை சேர்ந்த 27 வயது இளைஞர் கடந்த ஜூன் 7-ஆம் தேதி கடுமையான தலை காயத்துடன் ராயபுரம் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

 

அவரை பரிசோதித்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதில் 10 பேர் அந்த இளைஞரை தாக்கியது தெரியவந்தது. அதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதை தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. மேலும் அவருக்கு பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.

 

அதன் முடிவில் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது ஜூன் எட்டாம் தேதி உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் அவரை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் ஜூன் 11 ஆம் தேதி அவர் உயிரிழந்ததாக சுகாதாரத்துறை வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

தலையில் ஏற்பட்ட பலத்த காயமும் அதனால் மூளையில் ஏற்பட்ட ரத்தம் கட்டும் தான் இறப்பிற்கு காரணம் எனக் குறிப்பிட்டு இருந்தாலும் கொரொனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதால் அவரைத் தாக்கிய நபர்களுக்கு கொரொனா இருக்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

 

குற்றவாளிகளை காவல்துறையினர் கைது செய்ததும் பரிசோதனை மேற்கொள்வதன் மூலம் மேலும் தொற்று பரவாமல் தடுக்க மருத்துவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon