--- --:--:-- --

சிவகங்கை மாவட்டத்தில் அதிகமாகும் கரோனா.’மேலும் 11 பேருக்கு நோய் தொற்று உறுதி.மாவட்ட நிர்வாகம் அடுத்த கட்ட முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமா!

8.2

சிவகங்கை மாவட்டத்தில் தொடக்கத்தில் 12 பேர் பாதிக்கப்பட்டு, அனைவரும் குணமடைந்தனர். அதைத்தொடர்ந்து மகாராஷ்டிரா, மேற்குவங்கம், குஜராத் உள்ளிட்ட வெளிமாநிலங்கள் மற்றும் சென்னையில் இருந்து வருவோரை சுகாதாரத்துறையினர் பரிசோதித்து வருகின்றனர்.

 

அவர்களில் ஏற்கனவே 52 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. அனைவரும் சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, 32 குணமடைந்தனர்.

 

இந்நிலையில் நேற்று 7 பேர் குணமடைந்தனர். மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தன் வீட்டிற்கு வழியனுப்பி வைத்தனர். மருத்துவக் கல்லூரி டீன் ரத்தினவேல், நிலைய மருத்துவ அலுவலர்கள் மீனா, முகமது ரபீக் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

இந்நிலையில் நேற்று சென்னையில் இருந்து வந்த இளையான்குடி பகுதியைச் சேர்ந்த நான்கு பேர், மானாமதுரையைச் சேர்ந்த 2 பேர், காளையார்கோவில், காரைக்குடி, சிவகங்கை, பொன்குண்டுபட்டி, கண்டவராயன்பட்டி பகுதியைச் சேர்ந்த தலா ஒருவர் என 11 பேருக்கு கரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. அவர்கள் சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon