கொரோனா பாதிப்பில் 4-வது இடத்துக்கு சென்றது இந்தியா!
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 76 லட்சத்தை நெருங்குகிறது. குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 38 லட்சத்து 39 ஆயிரத்தை கடந்துள்ளது. கொரோனா வைரசின் தாக்கமும். பரவலும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் உலகம் முழுவதும் 4 லட்சத்து 23 ஆயிரத்து 700 பேர் கொரொனாவால் உயிரிழந்துள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 75 லட்சத்து 89 ஆயிரத்துக்கு மேலாக உயர்ந்துள்ளது. 20 லட்சத்து 90 ஆயிரம் பாதிப்புகளை கொண்ட அமெரிக்காவில் ஒரு லட்சத்து 16 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரொனாவால் பலியாகியுள்ளனர். தீவிர பரவலுக்கு உள்ளாகியிருக்கும் பிரேசலில் உயிரிழப்பு 41,000 ஐ கடந்துள்ளது. அங்கு 8 லட்சத்து 5,700 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஐந்து இலட்சத்திற்கும் அதிக பாதிப்புகளுடன் ரஷ்யா மூன்றாவது இடத்தில் இருக்கும் நிலையில் 2 இடங்கள் முன்னேறி நான்காவது இடத்திற்கு வந்து இருக்கிறது இந்தியா. தொற்றின் ஆரம்பத்தில் அதிக பாதிப்புகளை கொண்டிருந்த பிரிட்டன், ஸ்பெயின் நாடுகளை பின்னுக்கு தள்ளியுள்ளது இந்தியா.






