--- --:--:-- --

மருத்துவமனையிலேயே நோயாளி வெட்டிக் கொலை!

1

மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நபர் மருத்துவமனையில் கொலை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. மதுரை கரும்பாலை பகுதியை சேர்ந்த முருகன் என்பவர் எலும்பு முறிவு காரணமாக ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

 

இன்று அதிகாலை முருகன் சிகிச்சை பெறும் அறைக்குள் புகுந்த 4 பேர் கொண்ட கும்பல் கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் முருகனை சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடியது. ரத்த வெள்ளத்தில் கிடந்த முருகனுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிர் இழந்துள்ளார்.

 

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதையடுத்து கொலை செய்யப்பட்ட முருகன் பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon