--- --:--:-- --

மருந்தகத்தில் அளிக்கப்பட்ட தவறான சிகிச்சையால் சிறுமி உயிரிழப்பு!

11

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே மருந்தகத்தில் அளிக்கப்பட்ட தவறான சிகிச்சையால் வடமாநிலத்தை சேர்ந்த சிறுமி உயிரிழந்ததாக புகார் எழுந்துள்ளது. தொரப்பள்ளி அக்ரஹாரத்தில் கலிமுல்லா என்பவன் எட்டு ஆண்டுகளாக மருந்தகம் நடத்தி வருகிறான்.

 

மருத்துவம் படிக்காமல் அனுமதியின்றி மருந்தகம் நடத்தி வந்துள்ள இவர் தனது மனைவியுடன் சேர்ந்து நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் உடல்நல பாதிப்பு காரணமாக வந்த வடமாநிலத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி மோனா என்பவருக்கு பரிதா ஊசி போட்டுள்ளார்.

 

பின்னர் வீடு திரும்பிய அந்த சிறுமி மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். தவறான சிகிச்சை அளித்ததாக பரிதாவை கைது செய்த போலீசார் தலைமறைவான கலிமுல்லாவை தேடிவருகின்றனர். இதனிடையே சுகாதாரத் துறை அதிகாரிகளால் மருந்தகத்திற்கு சீல் வைக்கப்பட்டது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon