--- --:--:-- --

கல்வி கட்டணங்களை செலுத்த வற்புறுத்தும் தனியார் பள்ளிகளின் மீது கடும் நடவடிக்கை – கோவை கலெக்டர் எச்சரிக்கை !!!

0.2

அனைத்து வகை தனியார் பள்ளிகள் பெற்றோர்களிடம் 2020- 2021 கல்வியாண்டிற்கான கல்விக் கட்டணங்கள்,நிலுவை கட்டணங்களை செலுத்த வற்புறுத்தவோ,கட்டாயப்படுத்தக் கூடாது எனவும்,அவ்வாறு பெற்றோர்களிடம் இருந்து பெறப்படும் புகார்கள் உறுதி செய்யப்படும் நிலையில் அரசு விதிகளின் படி பள்ளிகளின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் ” கோவை மாவட்டத்தில் உள்ள சி.பி.எஸ்.இ மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் கல்வி கட்டணம் செலுத்தவும்,நோட்டு,புத்தகங்களுக்கான கட்டணங்கள் செலுத்தக்கோரியும்,புத்தகங்களை பெற பெற்றோர்களை அழைப்பதாகவும் தெரிவித்து தொடர்ந்து பெற்றோர்களிடமிருந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளது.கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு நடைமுறையில் உள்ளது.

இதனால் தனியார் பள்ளிகள் பெற்றோர்களிடமிருந்து 2020 – 2021 ஆம் கல்வியாண்டிற்கான கல்விக்கட்டணங்கள்,நிலுவைக்கட்டணங்கள்,நிலுவைக்கான தாமதக்கட்டணங்களை செலுத்த வற்புறுத்தவோ,கட்டாயப்படுத்தவோ கூடாது என ஆணையிடப்பட்டுள்ளது.மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகம் மூலமாக சுற்றறிக்கையாகவும் அனுப்பப்பட்டுள்ளது.இந்நிலையில் தொடர்ந்து கல்விக்கட்டணங்களை செலுத்த கட்டாயப்படுத்துவது தமிழக அரசின் அரசாணை மற்றும் அறிவுரைகளை மீறும் செயலாக கருதப்படுகிறது.

அனைத்து வகை தனியார் பள்ளிகள் பெற்றோர்களிடம் 2020- 2021 கல்வியாண்டிற்கான கல்விக் கட்டணங்கள்,நிலுவை கட்டணங்களை செலுத்த வற்புறுத்தவோ,கட்டாயப்படுத்தக் கூடாது எனவும்,அவ்வாறு பெற்றோர்களிடம் இருந்து பெறப்படும் புகார்கள் உறுதி செய்யப்படும் நிலையில் அரசு விதிகளின் படி பள்ளிகளின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon