காட்மேன் வெப் சீரிஸ் விவகாரம் குறித்து படக்குழு வெளியிட்டுள்ள அறிக்கை!
காட்மேன் இணைய தொடருக்கு தடை கோருவதும் அதற்கு எதிரான வழக்குகளும் காட்சி ஊடகத் துறையில் கருத்து சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் என்று காட்மேன் வெப்சீரிஸ் படக்குழு தெரிவித்துள்ளது. காட்மேன் வெப்சீரிஸ் இல் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை அவதூறாக சித்தரித்த தாகக் கூறி பாரதிய ஜனதாவை சேர்ந்த அசுவத்தாமன் மற்றும் 5 அமைப்புகள் சார்பில் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து வெப்சீரிஸ் தயாரிப்பாளர் இளங்கோ, இயக்குனர் பாபு யோகேஸ்வரன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நாளை விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என சம்மன் அளித்தனர். இதனிடையே ஆன்லைனில் வெளியாகவிருந்த காட்மேன் வெப்சீரிஸ் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருப்பதாக தனியார் தொலைக்காட்சி நிறுவனம் அறிவித்தது.
இந்த நிலையில் காட்மேன் வெப்சீரிஸ் படைப்புக்குழு சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் காட்மேன் வெப்சீரிசில் இடம் பெற்றிருந்த வசனங்களில் உண்மை தன்மை என்ன? ஒட்டுமொத்த வெப்சீரிஸ் கதை என்ன? என்பது பற்றியெல்லாம் எந்த புரிதலும் இல்லாமல் பிராமண சமூகத்துக்கும், இந்து மதத்திற்கு எதிரானது எனும் கருத்தை உருவாக்கியுள்ளதாகவும் வெப்சீரிஸ் அனைவரும் நடவடிக்கைக்கு எதிராக ஊடக உலகம் திரள வேண்டிய சூழல் உருவாகி இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒருவேளை காட்மேன் முற்றிலுமாக தடை செய்யப்படும் ஆனால் எதிர்காலத்தில் யார் வேண்டுமானாலும் தலையிட்டு எந்தப் படைப்பையும் திரைக்கு வரும் முன் தடுத்து நிறுத்தி விடலாம் எனும் நிலை ஏற்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. எனவே இதை ஒரு கையெழுத்து இயக்கமாக மாற்றி மத்திய அமைச்சகத்திற்கும் பிரதமர் மற்றும் முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்று வெப்சீரிஸ் படைப்பு குழு தனது அறிக்கையின் மூலம் கேட்டுக்கொண்டுள்ளது.






