--- --:--:-- --

வீட்டின் சமையலறையில் பதுங்கி இருந்த 7 அடி நீள பாம்பு…!

12

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் வீட்டின் சமையலறையில் 7 அடி நீள நாகப்பாம்பு இருந்ததை கண்டு வீட்டில் இருந்தவர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். ஆலான்கொம்பு என்ற பகுதியில் சங்கர் என்பவரது வீட்டின் சமையலறையில் மளிகை பொருட்கள் வைக்கப்பட்டு இருந்த பகுதியில் நாகப்பாம்பு இருந்ததை கண்டு அவரது குடும்பத்தினர் அலறியடித்து வெளியேறினர்.

 

இது தொடர்பாக வனத்துறைக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து இரண்டு மணி நேரப் போராட்டத்திற்குப் பின்பு 7 அடி நீள பாம்பை பிடித்தனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon