--- --:--:-- --

குடியரசுத் தலைவருக்கு நீதிமன்றம் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது!

2

கருணை மனுக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்க மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு காலக்கெடுவை நிர்ணயம் செய்வது தொடர்பாக பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

 

கருணை மனுக்கள் மீது குடியரசுத் தலைவர் முடிவெடுக்க காலக்கெடுவை நிர்ணயிக்க வேண்டும் என்று கோரி உச்சநீதிமன்றத்தில் சிவகுமார் என்பவர் பொதுநல மனுவை தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் கருணை மனுக்கள் மீது முடிவெடுப்பது குடியரசுத் தலைவரின் அதிகாரம் சார்ந்த விஷயம்.

 

இதில் குடியரசுத் தலைவருக்கு நீதிமன்றத்தால் எந்தவிதமான உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என்று கருத்து தெரிவித்தது.

அதேவேளையில் கருணை மனுக்கள் தொடர்பான ஆவணங்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைப்பது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு உச்சநீதிமன்றத்தால் காலக்கெடுவை நிர்ணயிக்க முடியும் என்றும் இதுதொடர்பாக மத்திய அரசின் கருத்துக்களை கேட்க நாங்கள் விரும்புகிறோம் என்று நீதிமன்றம் கூறியது.

 

நான்கு வார காலத்திற்குள் பதிலளிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon