--- --:--:-- --

இதயத்தில் துளை இருந்த சிறுவனுக்கு உதவிய வேதாரண்யம் தன்னார்வலர்!

3.1

இதய நோயால் பாதிக்கப்பட்ட பங்களாதேசை சேர்ந்த 9 வயது சிறுவனுக்கு அறுவை சிகிச்சை செய்ய தேசம் கடந்து மதங்களை கடந்து மனித நேயத்துடன் உதவிய வேதாரண்யம் பகுதி தன்னார்வலருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

 

பங்களாதேசை சேர்ந்த முகமது என்ற 9 வயது சிறுவனுக்கு இதயத்தில் துளை இருப்பதும் வறுமையால் சிகிச்சை செய்ய முடியாமல் தவித்து வந்ததையும் ஓமன் நாட்டில் பணிபுரிந்தபோது சிறுவனின் உறவினர் மூலம் அறிந்தார் வேதாரண்யத்தை சேர்ந்த ராஜசேகர்.

 

இதையடுத்து விடுமுறையில் கடந்த மார்ச் மாதம் இந்தியாவிற்கு வந்த ராஜசேகர் சிறுவன் முகமது மற்றும் அவரது பெற்றோரை வரவழைத்து மருத்துவ உதவிக்கு ஏற்பாடு செய்தார். கோவையில் உள்ள மருத்துவமனையில் சிறுவனுக்கு அறுவை சிகிச்சைக்கும் ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த நிலையில் பொது முடக்கம் அமலுக்கு வந்ததால் அறுவை சிகிச்சை தள்ளிப்போக 3 பேரையும் தனது செலவில் பராமரித்து வந்துள்ளார். ராஜசேகர் அறுவை சிகிச்சை செலவை தோப்புத்துறையை சிறந்த தன்னார்வலர் சுல்தான் ஏற்றுக்கொள்ள கடந்த 16ஆம் தேதி வெற்றிகரமாக அறுவை சிகிச்சை முடிந்து உள்ளது.

 

வேற்று நாட்டை சேர்ந்த சிறுவனின் உயிரை காப்பாற்ற பொது முடக்க நேரத்திலும் மனிதாபிமானத்துடன் உதவிய ராஜசேகர் அறுவை சிகிச்சைக்கு உதவிய தன்னார்வலர் சுல்தான் அவர்களின் முயற்சி மனித நேயம் இன்னும் மாண்டு விடவில்லை என்பதையே காட்டுகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon