லடாக் எல்லைப்பகுதியில் படைகளை குவிக்கும் சீனா…!

லடாக் எல்லைப் பகுதியில் சீனா தனது படைகளைக் குவித்து உள்ளதால் இந்தியாவும் அங்கு படைகளை அதிகரித்துள்ளது. லடாக்கின் பல்வேறு பகுதியில் எல்லைக்கோடு அருகே தனது பகுதியில் சீனா 5 ஆயிரத்துக்கும் அதிகமான படைகளை குவித்துள்ளது. அங்கு சீன படைகள் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

 

எல்லையில் பாங்காங் டி‌எஸ்‌ஓ ஏரி மற்றும் பிங்கர் பகுதியில் சீன எல்லைப்பகுதிகள் உள்ளதோடு இந்திய எல்லைப் பகுதிக்கு அருகில் 10 முதல் 15 கிலோ மீட்டர் தொலைவில் அதிநவீன ராணுவ வாகனங்களை நடமாட்டம் இருப்பதாக இந்திய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

 

மேலும் அங்கு சாலை அமைக்கும் பணியிலும் சீனா ஈடுபட்டு இருப்பதாக கூறப்படுகிறது. லடாக்கின் கால்வான் பகுதியில் இந்தியா பாலம் கட்டி வருவதற்கு சீன தரப்பில் ஆட்சேபம் எழுப்பப்பட்டது. இந்த நிலையில் சீனாவின் படை குவிப்பு தீவிரம் அடைந்து இருப்பதால் இந்தியா தரப்பிலும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.


Leave a Reply