விமான மற்றும் ரயில் நிலையங்களில் ஆட்டோ, டாக்சிகளுக்கு அனுமதி!
தமிழகத்தில் விமான மற்றும் ரயில் நிலையங்களுக்கு பயணிகளை ஏற்றிச் செல்லவும், அங்கிருந்து அழைத்து வரவும் டாக்ஸி மற்றும் ஆட்டோக்களுக்கு அனுமதி வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கடந்த 23ஆம் தேதி முதல் சென்னை தவிர்த்து தமிழகம் முழுவதும் ஆட்டோக்களை நிபந்தனைகளுடன் இயக்க அனுமதி அளிக்கப்பட்டது.
இந்த நிலையில்தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தமிழகத்தில் உள்ள விமானம் மற்றும் ரயில் நிலையங்களுக்கு பயணிகளை அழைத்துச் செல்வதற்கும், அங்கிருந்து பயணிகளை அழைத்து வரவும் டாக்ஸி ஆட்டோ மற்றும் சைக்கிள் ரிக்ஷாக்கள் அனுமதி வழங்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.






