10 அடி உயரத்திற்கு தூக்கி வீசப்பட்டு விபத்தில் சிக்கிய லாரி!

நெல்லை வள்ளியூர் நான்கு வழி சாலையில் லாரி ஒன்று பக்கவாட்டுச் சுவரில் மோதியதில் பல அடி உயரத்திற்கு தூக்கி வீசப்பட்ட விபத்தின் பதைபதைக்கும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. ராஜபுதூர் பிரிவு அருகே நாகர்கோவில், திருநெல்வேலி நோக்கி வேகமாக வந்து கொண்டிருந்தது. அப்போது சாலையை கடந்த முதியவர் ஒருவர் மீது மோதாமல் இருக்க ஓட்டுநர் லாரியை பக்கவாட்டில் திருப்பியுள்ளார்.

 

ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரம் இருந்த சுவற்றில் மோதி தூக்கி வீசப்பட்டு சாலையின் எதிர்ப்புறத்தில் விழுந்தது. ஓட்டுநர் படுகாயம் அடைந்தார். நல்வாய்ப்பாக எதிர்த்திசையில் வாகனம் வராததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த விபத்து அங்கு உள்ள கடை ஒன்றில் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.


Leave a Reply