ராஜீவ் காந்தி கொலை வழக்கு : வாட்ஸ் ஆப் மூலம் பேச அனுமதிப்பதில் என்ன பிரச்சினை?

வாட்ஸ்அப் மூலம் உறவினர்களுடன் பேச அனுமதிப்பதில் என்ன பிரச்சனை உள்ளது என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதியாக உள்ள நளினி மற்றும் முருகன் சார்பாக உயர்நீதிமன்றத்தில் நளினியின் தாயார் பத்மா மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள்எம்எம் சுந்தரேஷ் அமர்வு முன்பு ஆஜரான வழக்கறிஞர் மனுவிற்கு பதில் அளிக்க ஒரு வார கால அவகாசம் கோரினார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் வாட்ஸ்அப் காலில் பேசுவதற்கு அனுமதிப்பதில் என்ன பிரச்சினை உள்ளது என்று கேள்வி எழுப்பினார். இது தொடர்பாக நாளை மறுநாள் பதிலளிக்க அரசுக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்துள்ளனர்.


Leave a Reply