காவல்நிலையம் அருகே சந்தனம் மரம் வெட்டிக் கடத்தல்.!!
ஈரோடு : சத்தியமங்கலத்தை அடுத்த தாளவாடி காவல் நிலையம் அருகே உள்ள கனரா வங்கி வளாகத்தில் இருந்த சந்தனமரம் வெட்டி கடத்தப்பட்டது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி மலைப்பகுதி, தமிழக கர்நாடகா எல்லையில் அமைந்துள்ளது. தற்போது கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் கடைகள் அனைத்தும் மாலை 3.00 மணியளவில் அடைக்கப்பட்டு விடுகிறது.
இதனால் மக்கள் நடமாட்டம் இல்லாமல் தாளவாடி பகுதி வெறுச்சோடி காணப்படுகிறது. இந்நிலையில் தாளவாடி காவல் நிலையத்தை ஒட்டியுள்ள வங்கி வளாகத்தில் ஒரு சந்தனமரம் இருந்தது. இதை மர்ம நபர்கள் இரவில் வெட்டி கடத்தி சென்றுள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த தாளவாடி காவல் துறையினர் மற்றும் வனத்துறையினர் சந்தனமரம் வெட்டிய நபர்களை தேடி வருகின்றனர். காவல் நிலையம் அருகே நடந்த இந்த சம்பவத்தால் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.






