மணல் திருட்டை தடுக்க சென்ற போலீசார் மீது தாக்குதல்.!!

வேலூர் : இரவு நேரத்தில் மணல் கொள்ளையில் ஈடுபட்ட சமூக நீதி மக்கள் கட்சி மாவட்ட தலைவரை தடுக்க முயன்ற தனிப்படை போலீசார் மீது பயங்கர தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் மணல் கடத்தலை தடுக்க எஸ்.பி பிரவேஷ்குமார் உத்தரவின் பேரில் எஸ்பி தனிப் பிரிவை சேர்ந்த 2 ஆயுதப்படை போலீசார் நேற்று இரவு முள்ளிபாளையம் பாலாற்றில் மணல் கடத்தலை தடுப்பதற்காக சென்றனர்.

 

அப்போது பைக் மூலம் ஒரு கும்பல் மணல் கடத்தி கொண்டிருந்தனர். போலீசார் அவர்களை தடுக்க முயன்றனர் இதனால் ஆத்திரமடைந்த மணல் கடத்தல் கும்பல் போலீஸ்காரர்கள் மீது சோடா பாட்டில் மற்றும் கற்களை வீசி தாக்க முயன்றனர்.

 

இதையடுத்து அப்பகுதியில் இருந்து போலீசார் தப்பி வந்து வேலூர் வடக்கு காவல் நிலைய போலீசில் புகார் அளித்தனர் இதையடுத்து இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து முள்ளிபாளையம் பகுதியை சேர்ந்த சமூக நீதி மக்கள் கட்சியின் வேலூர் மாவட்ட தலைவர் அப்துல் மஜீத் ( வயது 35) ,அதே பகுதியை சேர்ந்த தமிழ் செல்வன்( வயது 28) அவரது சகோதரர் தமிழ்மணி என்கிற ஜில்லா( வயது 24) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து அவர்களின் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.


Leave a Reply