நாடுகளை நடுங்க வைக்கும் வெட்டுக்கிளி! இதனால் இந்தியாவும், பாகிஸ்தானும் சேர வாய்ப்பா?

காஷ்மீர் விவகாரம், எல்லை பிரச்சனை என்று பல்வேறு முரண்பாடுகளை கொண்டிருக்கும் இந்தியாவும், பாகிஸ்தானும் நெருங்கி வருவதற்கான வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்த வாய்ப்பை ஏற்படுத்த இருப்பது ஒரு சிறு பூச்சி. சுண்டு விரல் நீளம் கொண்டது வெட்டிக்கிளி. வெளியுறவுக் கொள்கையிலும் நாட்டின் பொருளாதாரத்திலும் இந்த சிறு பூச்சியால் என்ன பாதிப்பை ஏற்படுத்திவிட முடியும் என்று தோன்றலாம்.

 

அமெரிக்கா முதல் இந்தியா வரையிலும் இந்த பூச்சியை கண்டு கலங்காத நாடுகளே இல்லை. கூட்டமாக சேர்ந்தால் ஒரு நாட்டின் உணவு பஞ்சத்திற்கு கூட இவை காரணமாக அமைந்து விடும். இந்த பூச்சியால் பகை நாடுகளாக இருக்கும் இந்தியாவும், பாகிஸ்தானும் ஒருங்கிணைந்து பணியாற்றும் சூழல் ஏற்பட்டுள்ளது.

 

வெட்டுக்கிளிகள் தாங்கள் செல்லும் இடத்தில் இருக்கும் எல்லாவற்றையும் தின்று விடும் திறன் கொண்டவை. சில அச்சம்பட்டு கிளிகள் சேர்ந்தால் சில ஆயிரம் பேருக்கு தேவையான உணவு தானியங்களை காலி செய்துவிடும். பொதுவாக இவை கோடிக்கணக்கில் இடம்பெயரும் தன்மை கொண்டவை.

 

ஆப்பிரிக்காவின் கென்யா, எத்தியோப்பியா போன்ற நாடுகள் ஆசியாவில் ஏமன், சவுதி அரேபியா போன்ற நாடுகளும் வெட்டுக்கிளிகளால் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். ஒவ்வொரு நாடாக இடம்பெயர்ந்த வெட்டுக்கிளிகள் கடந்த சில மாதங்களாகவே ஈரான் பாகிஸ்தான் உள்ளிட்ட தெற்மேற்காசிய நாடுகளில் அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன.

 

இந்தியாவில் ராஜஸ்தான், குஜராத் போன்ற மாநிலங்களில் கோதுமை, கடுகு, சீரகம் உள்ளிட்ட பயிர்களை இவை தாக்கி இருக்கின்றன. தென்னிந்தியாவை நோக்கி விரைவில் வரக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் ஈரானுக்கும், பாகிஸ்தானுக்கும் உதவ இந்தியா திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

 

வெட்டுக்கிளிகளை ஒழிப்பதற்காக மாலத்தியான் என்ற பூச்சிக்கொல்லி மருந்து வழங்குவதற்கு இந்தியா முன்வந்து இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. மூன்று நாடுகளும் இணைந்து வெட்டுக்கிளி முன்னெச்சரிக்கை அமைப்பு ஒன்றை நிறுவலாம் என்றும் யோசனை தெரிவித்துள்ளது இந்தியா.

 

இந்த திட்டத்தை ஈரான் வரவேற்று இருந்தாலும் பாகிஸ்தானிடம் இருந்து எந்த பதிலும் இதுவரை வரவில்லை. வெட்டுக்கிளியை ஒழிக்க மூன்று நாடுகளும் இணைந்து செயல்பட்டால் அது புதிய அத்தியாயத்தின் தொடக்கமாக இருக்கும்.


Leave a Reply