தொழிலாளர்களுக்கு சம்பளத்திற்கு பதில் பருத்தி!

தூத்துக்குடி மாவட்டத்தில் பருத்திக்கு உரிய விலை கிடைக்காததால் பணத்திற்கு பதில் கூலியாக பருத்தியை தரும் நிலை ஏற்பட்டுள்ளது. கோவில்பட்டி விளாத்திகுளம் எட்டயபுரம் புதூர் உள்ளிட்ட பகுதிகளில் மாநிலங்களில் பிரதான பயிராக விளங்குகிறது.

 

இதற்க்கிடையே சாகுபடி செய்யும் விவசாயிகள் தற்போது விலை கிடைக்காமல் பருத்தி செடி பயிரிட்டுள்ளனர். கூலி கொடுக்க பணமில்லாமல் பருத்தியை கொடுக்கும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். கடந்தாண்டு ஒரு குவிண்டால் 5 ஆயிரத்து 600 ரூபாய் முதல் 7,000 ரூபாய் வரை விற்பனையானது. ஊரடங்கின் காரணமாக இந்த ஆண்டு ஆயிரத்து 700 ரூபாய்க்கு கூட கேட்கப்படவில்லை.

 

பருத்திக்கு கொள்முதல் நிலையம் பாதிக்கப்பட்டோருக்கு ஏக்கருக்கு 10,000 ரூபாய் இழப்பீடு தொகை கேட்கும் விவசாயிகள் பாரம்பரிய விதைகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கிறார்கள்.


Leave a Reply