பாம்பை பிடித்து கோயிலின் வேல் கம்பியில் குத்திச்சென்ற நபர்!
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பாம்பை பிடித்து அதனை துண்டு துண்டாக வெட்டி அங்கு உள்ள கோவிலின் வேல் கம்பியில் குத்தி வைத்து சென்ற நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். கிணத்துக்கடவு பகுதியில் உள்ள பிடாரி அம்மன் கோவிலில் உள்ள வேல் கம்பில் சாரை பாம்புகளின் துண்டுகள் குத்தி வைக்கப்பட்டு இருப்பதை கண்ட அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் அதே பகுதியை சேர்ந்த வேலுச்சாமி என்பவர் பாம்பை பிடித்து அதனை கொன்று விட்டு சென்றது தெரியவந்தது.






