தனது தந்தையை சைக்கிளில் அமர வைத்து 1,200 கி.மீ ஓட்டிச் சென்ற சிறுமி!

சைக்கிளில் உடல்நலம் பாதித்த தந்தையை ஏறி அமர வைத்தபடி 1200 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஓட்டி சென்ற 15 வயது சிறுமிக்கு இந்திய சைக்கிள் போட்டி கூட்டமைப்பு பயிற்சி அளிக்க முன்வந்துள்ளது. ஹரியானாவின் குரு கிராமிலிருந்து சொந்த மாநிலமான பிகாருக்கு சைக்கிளில் உடல்நலம் பாதித்த தந்தையை பின் இருக்கையில் அமரவைத்து சிறுமி ஜோதிகுமாரி எட்டு நாட்களுக்கும் மேலாக ஓட்டிச் சென்றார்.

 

இதை கண்ட இந்திய சைக்கிள் போட்டி கூட்டமைப்பு தலைவர் சோதனையில் சிறுமி தேர்ச்சி பெற்றால் டெல்லியில் உள்ள தேசிய சைக்கிள் போட்டி அகாடமியில் தேர்வு செய்யப்படுவார் என கூறினார். சிறுமியை தொடர்பு கொண்டு அவரை டெல்லிக்கு அடுத்த மாதம் வரும்படி கூறி இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.


Leave a Reply