இனிமேல் கலவரம் வெடிக்கும் என வீடியோ வெளியிட்ட நபர் உட்பட 3 பேரை நாகை மாவட்ட போலீசார் கைது செய்துள்ளனர். போலீசார் இனி பொறுத்துக் கொண்டிருக்க மாட்டோம் என நடவடிக்கை எடுத்ததன் பின்னணி என்ன? ஒரு வீடியோ தான் தற்போது நாகை மாவட்டத்திலும் தென் மாவட்டங்களிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வீடியோவில் இருப்பவர் போலீசாரிடம் சிக்கியது எப்படி? சமீபத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள செட்டி பாளையம் கிராமத்தில் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. போலீசார் இருதரப்பினர் மீதும் நடவடிக்கை எடுத்தனர். இதுதொடர்பாக கே கே செல்வகுமார் கண்டன அறிக்கையை வெளியிட்டார்.
அவருக்கு பதில் அளிப்பதாக கூறி நாகை மாவட்டம் ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த ஆர் சரவணன் என்பவர் சர்ச்சைக்குரிய வீடியோவை வெளியிட்டார். சரவணன் வீடியோவிற்கு எதிர்தரப்பை சேர்ந்த குரு மணிகண்டன் என்பவரும் வீடியோவை வெளியிட்டுள்ளார். மேலும் எதிர்தரப்பை சேர்ந்த மகேஷ் என்பவரும் ஒரு ஆடியோ வெளியிட்டு சர்ச்சையை கிளப்பினார்.
இப்படி இரு சமூகங்களை சேர்ந்த அமைப்பினரிடையே சமூக வலைதளங்களில் மோதல் நடந்து வந்தது. ஒரு கட்டத்தில் நேரில் மோதிக்கொள்ள இரு தரப்பினரும் முடிவு செய்து தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த முத்து என்பவர் திருவாரூர் வந்து தான் காத்திருப்பதாக வீடியோவை வெளியிட்டார்.
இந்த நிலையில் வேதாரண்யத்தை சேர்ந்த வேதநாயகம் என்பவர் கடந்த 15ஆம் தேதி வேதாரண்யம் காவல் நிலையம் மற்றும் வேதாரண்யத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளார். புகாரை விசாரித்த வேதாரண்யம் போலீசார் சர்ச்சைக்குரிய வீடியோ வெளியிட்ட ஆர் சரவணன் அவரது ஆதரவாளர்களின் பாண்டியராஜன் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.
கைதான சரவணன் கடந்த ஆண்டு வேதாரண்யத்தில் நடந்த அம்பேத்கர் சிலை உடைப்பு வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கைதானவர் என்பது குறிப்பிடத்தக்கது.