விமானத்தில் பயணிப்பவர்களுக்கு ஆரோக்ய சேது செயலி கட்டாயம்!…மற்ற விதிமுறைகள் என்னென்ன?
இந்திய விமான நிலைய ஆணையம் பயணிகள் மற்றும் அரசு பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. விமான நிலையத்திற்குள் வரும் பயணிகள் வெப்பமானி மூலம் கண்டிப்பாக கண்காணிக்கப்படுவர். அனைத்து பயணிகளும் கட்டாயமாக தங்கள் கைபேசிகளில் ஆரோக்ய சேது செயலியை பயன் பாட்டில் வைத்திருக்க வேண்டும்.
இதனை காவல்துறை மற்றும் சிஏஎஸ்எஸ் ஊழியர்கள் ஆய்வு செய்வார்கள். பயணிகள் விமானம் புறப்படுவதற்கு நான்கு மணி நேரத்திற்கு முன்பு விமான நிலையத்திற்கு வந்தால்தான் அனுமதிக்கப்படுவர். பயணிகள் மற்றும் ஊழியர்கள் விமான நிலையம் வருவதற்கான பொது போக்குவரத்தையும், தனியார் கால்டாக்சி கிடைப்பதையும் மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும்.
அனைத்து பயணிகளும் கட்டாயம் முக கவசம் மற்றும் கையுறைகள் அணிந்து இருக்க வேண்டும். விமானத்திற்கு காத்திருக்கும் பயணிகள் தனிமனித இடைவெளியுடன் அமரவேண்டும். பயணிகள் உள்ளே நுழைந்ததும் அவரது லக்கேஜ் மீது கிருமி நாசினி தெளிக்கப்படும். உடைமைகளை இழுத்து சொல்லும் வண்டிகளுக்கு அனுமதி கிடையாது.
கூட்டத்தை தவிர்ப்பதற்காக முனையத்தின் அனைத்து நுழைவு வாயில்கள் திறக்கப்பட்டு இருக்க வேண்டும். விமான நிலைய ஓய்வறையில் செய்தித்தாள் மற்றும் பத்திரிக்கைகள் வழங்கப்படாது.






