குடிகார தந்தையால் குழந்தைக்கு ஏற்பட்ட சோகம் ! உறவினர்கள் கதறல் !

குடிகார தந்தையின் செயலால் டூ வீலரின் முன்னால் உட்கார்ந்திருந்த குழந்தை சாலையில் விழுந்து படுகாயம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே தேவமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வம். இவர் தனது 4 வயது குழந்தையான அன்பு அமுதனுடன் டூவீலரில் சென்றுள்ளார்.

 

அளவுக்கதிகமாக மது அருந்திய செல்வம் குழந்தையை வண்டியின் டேங்க் மீது அமர வைத்து வண்டியை தாறுமாறாக ஓட்டி வந்துள்ளார். இரவு 10 மணியளவில் ஊருக்கு திரும்பும்போது சிதம்பரம் ஜெயங்கொண்டம் சாலை புதுச்சாவடி அருகே முன்னால் உட்கார்ந்திருந்த குழந்தை சாலையில் விழுந்தது.

 

இந்த சம்பவமே தெரியாத அளவிற்கு செல்வம் போதையில் வாகனத்தை ஓட்டிச் சென்றுள்ளார். சாலையில் விழுந்த குழந்தை தலையில் படுகாயமடைந்த நிலையில் கிடந்ததை பார்த்த ராஜா என்ற இளைஞர் தன் நண்பர்களோடு சேர்ந்து குழந்தையை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தார்.

 

செல்வத்தை தேடியபோது அவர் அங்கு உள்ள முட்புதரில் நினைவிழந்து கிடந்துள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு குழந்தையின் நிலையை பார்த்த உறவினர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.


Leave a Reply