ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ரகசியமாக உதவி வரும் சல்மான் கான்!
மும்பையில் ஏழைமக்கள் ஏராளமானோருக்கு ஹிந்தி நடிகர் சல்மான்கான் அரிசி, எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை வழங்கி ரகசியமாக உதவி வருவது தெரியவந்துள்ளது. கொரொனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருப்பதால் வேலைக்கு செல்ல முடியாமல் தினக்கூலி தொழிலாளர்கள் உள்ளிட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுபோன்ற நபர்களுக்கு சல்மான்கான் ரகசியமாக நாள்தோறும் உதவி செய்து வருகிறார். பீயிங்க் ஹங்ரி என்ற வாகனம் மூலம் அரிசி, எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் பொட்டலமாக கட்டப்பட்டு ஏராளமானோருக்கு அவர் சார்பில் அளிக்கப்படுகிறது. இதனை அவர் வெளிப்படையாக அறிவிக்காத போதிலும் ரசிகர் ஒருவர் வீடியோ எடுத்து வெளியிட்டதால் வெளி உலகிற்கு தெரிய வந்துள்ளது.






