--- --:--:-- --

10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை நடத்த அனுமதி அளித்த மத்திய அரசு !

8

பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகளை நடத்திக்கொள்ள மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இது குறித்து மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா அனைத்து மாநில தலைமை செயலர்களுக்கும் அறிவிப்பு ஒன்றை அனுப்பியுள்ளார்.

 

அதில் பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மற்றும் சிபிஎஸ்சி தேர்வுகளை நடத்துவது குறித்து அனைத்து மாநிலங்களிலிருந்தும் வந்த கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும் பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் தேர்வு மையங்களை அமைக்க கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேர்வு மையங்களில் மாணவர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள் கட்டாயமாக முக கவசம் அணிய வேண்டும் என்றும் அனைவருடைய உடல் வெப்ப நிலையும் பரிசோதிக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

தேர்வு எழுத வரும் மாணவர்களுக்காக சிறப்புப் பேருந்து வசதிகள் செய்து தரப்பட வேண்டும் என்று அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய உள் துறை அறிவுறுத்தியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon