10 ஆம் வகுப்பு பொது தேர்வு…என்ன தான் நடக்க போகிறது?

உலகையே ஸ்தம்பிக்கச் செய்துள்ள கொரொனா நோய்த்தொற்று கல்வித் துறையையும் புரட்டிப் போட்டுள்ளது. பொதுத் தேர்வுகள் நடத்தப்படும் மார்ச் மாதத்தில் கொரொனா நோய்த்தொற்று தமிழகத்தில் பரவ தொடங்கியது. பிளஸ் டூ தேர்வை முழுமையாக நடத்தி விட்டாலும் பத்தாம் வகுப்பு பொது தேர்வு ஒத்திவைக்கப்பட்டது.

 

ஜூன் ஒன்றாம் தேதி தேர்வை தொடங்க கடும் எதிர்ப்புகள் தொடர்ந்தது. இதனை தொடர்ந்து தேர்வை 15 நாட்களுக்கு ஒத்தி வைத்துள்ளது தமிழக அரசு. எத்தகைய சூழலிலும் தேர்வை நடத்த வேண்டியதன் கட்டாயம் இருப்பதாக துறை சார்ந்த சிலர் கருதுகின்றனர்.

 

தமிழகத்தில் கொரொனா நோய் தொற்றின் தொழில் வளர்ச்சி விகிதம் அதிகமாக இருந்து வருகிறது. ஊரடங்கு மே 31-ஆம் தேதி வரை அமலில் இருப்பதால் அதிலிருந்து 15 நாட்களுக்கு ஒத்தி வைப்பதாக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.

 

ஒருவேளை மே 31 ஆம் தேதிக்கு பிறகு ஊரடங்கு நீட்டிப்பு ஏற்பட்டால் அப்போதும் இதே சிக்கல் நீடிக்கும் என்ற கேள்வியை முன் வைக்கின்றனர் தேர்வை எதிர்ப்பவர்கள். பத்து நாட்கள் வகுப்புகளை நடத்தி தேர்வை நடத்துவது ஊரடங்கால் பொருளாதார மற்றும் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உதவும் என கல்வியாளர்கள் கருதுகின்றனர்.

 

தேர்வையும், உயர் படிப்புகளில் அவசியத்தையும் அடிப்படையாகக் கொண்டு முடிவு எடுப்பதை விட மாணவர்களின் உடல் நலனையும் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு முடிவெடுக்க வேண்டிய அவசியம் பள்ளிக்கல்வித்துறைக்கு உள்ளது.


Leave a Reply