சென்னையை அடுத்த கோவையில் கொரொனாவை பரப்பியவர்கள் என்று தேவையில்லாமல் வடகிழக்கு மாநிலங்களை சேர்ந்தவர்கள் மிரட்டிய சம்பவம் நடந்துள்ளது. காவல்துறை விடுத்திருக்கும் கடும் எச்சரிக்கை என்ன? கோவை சாய்பாபா காலனி பகுதியில் மணிப்பூர் மாநில பெண்களை இளைஞர் ஒருவர் மிரட்டிய காட்சிகள் வெளியாகியுள்ளன.
கொரொனா பீதியில் தவறு செய்த இளைஞர் சிக்கியது எப்படி? மேகாலயா, மணிப்பூர், அஸ்ஸாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களை சேர்ந்தவர்கள் கோவையில் தங்கி பணிபுரிந்து வருகின்றனர். நிலையங்கள், ஹோட்டல்களில் வேலை பார்த்து வரும் ஏராளமான வடகிழக்கு மாநிலத்தவர் சாய்பாபா காலனி பகுதியில் வசித்து வருகிறார்கள்.
ஞாயிறன்று சாலையில் நடந்து சென்ற மணிப்பூர் மேகாலயா மாநிலங்களைச் சேர்ந்த பெண்களை இளைஞர் ஒருவர் தடுத்து நிறுத்தியுள்ளார். குடிபோதையில் இருந்த அந்த இளைஞர் அவர்களிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. பெண்களின் தோற்றத்தை வைத்து அவர்கள் சீனாவைச் சேர்ந்தவர்கள் என நினைத்துக் கொண்டு அவர்களை தகாத வார்த்தையில் திட்டியுள்ளார்.
உங்களால் தான் கொரொனா தமிழகத்தில் பரவி வருகிறது என்று மதுபோதையில் அந்த இளைஞர் மிரட்டியதை அப்பெண்கள் வீடியோவாக பதிவு செய்துள்ளனர். இதையடுத்து பாதிக்கப்பட்ட வடகிழக்கு மாநில பெண்கள் சாய்பாபா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். தங்களை கோ கொரொனா என பேசியதாகவும் தகாத வார்த்தைகளில் திட்டி தள்ளி விட்டதாகவும் புகாரில் குறிப்பிட்டு இருந்தனர்.
வீடியோவை ஆய்வு செய்த சாய்பாபா காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பந்தப்பட்ட இளைஞரை தேடி வந்தனர். ஊரடங்கு காரணமாக சொந்த மாநிலத்திற்கு திரும்ப முடியாத நிலையில் தங்களை மிகவும் மோசமாக நடத்தியது வருத்தமளிப்பதாக மணிப்பூர் மாநில பெண்கள் தெரிவித்தனர்.
விசாரணையில் பெண்களை விரட்டியது தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுனர் விக்னேஷ் என்பது தெரியவந்தது, அதே பகுதியில் அறை எடுத்து தங்கியுள்ளார். அவரை சாய்பாபா காலனி போலீசார் கைது செய்தனர். அவர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம், கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர். கடந்த மார்ச் மாதம் சென்னையில் வடகிழக்கு மாநிலத்தவர்களை சிலர் மிரட்டி அடுத்த சம்பவமும் அரங்கேறியது குறிப்பிடத்தக்கது.