--- --:--:-- --

வெளிநாடுகளுக்கு போலி மருந்துகளை அனுப்பிய திருத்தணிகாசலம்! லட்சக்கணக்கில் மோசடி செய்தது அம்பலம்!

9

போலி சித்த மருத்துவர் திருத்தணிகாசலம் வெளிநாடுகளுக்கு போலி மருந்துகளை இங்கு இருந்து அனுப்பி பணம் சம்பாதித்து இருப்பதும் ஆட்டிஸம், வெண்புள்ளி நோய்க்கு மருந்து தருவதாக கூறி ஏமாற்றியது தெரியவந்ததை அடுத்து மேலும் இரண்டு வழக்குகளில் திருத்தணிகாசலம் கைது செய்யப்பட்டார்.

 

கொரொனாவுக்கு தான் மருந்து கண்டுபிடித்ததாகக் கூறப்படும் மருந்துகளை லண்டனில் இரண்டு பேருக்கும் மற்றும் ஸ்வீடனில் தலா ஒருவருக்கு அனுப்பி லட்சக்கணக்கில் பணம் வாங்கியதாக திருத்தணிகாசலம் விசாரணையின் போது தெரிவித்தார்.

 

வெண்புள்ளி, முடக்குவாதம், புற்றுநோய் ஆகிய நோய்களுக்கு மருந்து தருவதாக கூறி பலரிடம் இருந்து லட்சக்கணக்கில் இவர் பணத்தை ஏமாற்றியது தெரிய வந்தது.

 

ஏற்கனவே கைது செய்யப்பட்ட வழக்கில் மே 20ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் இருக்கும் திருத்தணிகாசலத்தை தற்போது இரண்டாவது முறையாக கைது செய்யப்பட்ட வழக்கில் ஜூன் மாதம் ஒன்றாம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

சுகாதாரத்துறை கொடுத்த புகாரில் கைது செய்யப்பட்ட வழக்கில் போலி சித்தமருத்துவர் திருத்தணிகாசலம் எழும்பூர் நீதிமன்றத்தில் ஜாமீன் மனுவை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை எழும்பூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon