உடலில் காயங்களுடன் 13 வயது சிறுமியின் உடல் கண்டெடுப்பு! பாலியல் வன்கொடுமையா?
புதுக்கோட்டை மாவட்டத்தில் தைல மரக் காட்டில் காயங்களுடன் மீட்கப்பட்ட 13-வது சிறுமி சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டாரா என்ற சந்தேகத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிறுமி வசிக்கும் பகுதியில் குடிநீர் பிரச்சினை இருப்பதால் அங்குள்ள மக்கள் ஊருக்கு வெளியே குளத்தில் வரும் ஊற்று நீரை எடுத்து வருவது வழக்கம். அவ்வாறு தண்ணீர் எடுக்க சென்ற சிறுமி நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால், பெற்றோர் அவரைத் தேடியுள்ளனர். நீண்ட நேர தேடுதலுக்கு பிறகு அருகில் உள்ள தைல மர காட்டுப்பகுதியில் உடலில் காயங்களுடன் உயிருக்கு போராடிய நிலையில் சிறுமி மீட்கப்பட்டார்.
தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று இரவு உயிரிழந்தார். இது தொடர்பாக 4 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடி வரும் காவல்துறையினர் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டாரா என்பது உள்ளிட்ட கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.






