தமிழகத்தில் ஆம்னி பேருந்துகளுக்கான முன்பதிவு தொடக்கம் !
தமிழ்நாட்டில் தனியார் பேருந்துகளில் பயணம் செய்வதற்கான இணையவழி முன்பதிவு தொடங்கியுள்ளது. சில நிறுவனங்கள் ஜூன் 7ஆம் தேதி முதல் பேருந்துகளை இயக்க முடிவு எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பொதுப் போக்குவரத்துக்கு இதுவரை அரசு அனுமதிக்காத நிலையில் ஆம்னி பேருந்துகளுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது.
அரசு இதுதொடர்பாக விரைவில் அனுமதி அளிக்கும் என்று நம்புவதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் கூறுகின்றனர். இல்லையெனில் முன்பதிவு செய்தோற்காக தொகை திருப்பி அளிக்கப்படும் என்றும் கூறியுள்ளனர். அரசு வழிகாட்டு நெறிமுறைகளின்படி தனிமனித இடைவெளி ஆகியவை பின்பற்றப்படும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.






