ஜூன் 15 ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்ட 10 ம் வகுப்பு பொதுத்தேர்வு!
தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஜூன் 15ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டு உள்ளன. தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஜூன் 15ஆம் தேதி முதல் 25-ம் தேதி வரை பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடத்தப்படும் என்று அறிவித்தார்.
கொரொனா நோய் தொற்று பரவலை தடுக்கும் வகையில் பொது தேர்வு நடைபெறும் ஒரு தேர்வறையில் 10 மாணவர்கள் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்தார். மேலும் பொதுத்தேர்வு கால அட்டவணையையும் அவர் வெளியிட்டார்.
அது ஜூன் 15ஆம் தேதி மொழிப்பாட தேர்வு நடத்தப்படுகிறது. ஜூன் 17ஆம் தேதி ஆங்கிலமும், ஜூன் 19ஆம் தேதி கணிதமும் நடைபெற உள்ளது. ஜூன் 22ஆம் தேதி அறிவியல் பாடத்திற்கான தேர்வு, ஜூன் 24-ஆம் தேதி சமூக அறிவியல் தேர்வும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விருப்ப மொழி பாடத்திற்கான தேர்வு ஜூன் 20ம் தேதியும் தொழில் கல்விக்கான தேர்வு ஜூன் 25ம் தேதியும் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.






