--- --:--:-- --

வங்கி கடன் இ.எம்.ஐ சலுகை வழங்கப்படுமா..?

7

வங்கி கடன் செலுத்துவதிலிருந்து மூன்று மாதம் விலக்கி அளிக்கப்பட்ட சிலைகள் மே 31ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில் மீண்டும் நீட்டிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கொரொனா தாக்கம் காரணமாக ஊரடங்கு உத்தரவு மே 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

 

இந்த நிலையில் தொழில் நடவடிக்கைகள் முடங்கியதால் வங்கிகளில் வாங்கிய கடனை கட்ட முடியாமல் பலர் தவித்து வருகின்றனர். வங்கிக்கடன் செலுத்துவதிலிருந்து மூன்று மாதங்களுக்கு விலக்கு அளித்து ரிசர்வ் வங்கி கடந்த மார்ச் மாதம் அறிவித்த சலுகை மே 31ம் தேதியுடன் முடிவடைய உள்ளது.

 

இந்த நிலையில் ஜூன் மாதத்தில் இருந்து கடனை திருப்பிச் செலுத்தாவிட்டால் ரிசர்வ் வங்கியின் விதிமுறைப்படி அவை வாரா கடன்களாக கணக்கிடப்படும் என்பதால் நிறுவனங்கள் பிரச்சனைகளை எதிர்கொள்ள கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

 

இதையடுத்து கடனைத் திரும்பச் செலுத்துவதில் இருந்து மேலும் மூன்று மாதங்கள் நீட்டித்து செப்டம்பர் மாதத்திலிருந்து செலுத்துவது போல சலுகை வழங்க வேண்டும் என்று தொழில் நிறுவனங்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

 

ரிசர்வ் வங்கியின் அறிவிப்பை செயல்படுத்தி வங்கிகள் கடன் தொகையில் அசலுக்கு மட்டுமே சலுகையை வழங்கியதுடன் வட்டி குறைப்பு சலுகைகள் அளிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது வட்டி செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்றும் மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon