4-ஆம் கட்ட ஊரடங்கு குறித்து இன்று அறிவிப்பு வெளியாகும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார். இன்றுடன் மூன்றாவது கட்ட ஊரடங்கு நிறைவடைந்துள்ள நிலையில் இந்த மாத இறுதி வரை நான்காவது கட்ட ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பல்வேறு தளர்வுகள் இடம்பெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு முன்பு இருந்ததை விட நான்காவது கட்ட ஊரடங்கு வேறுபட்டதாக இருக்கும் என்று பிரதமர் தெரிவித்துள்ளார். இன்று மாலைக்குள் ஊரடங்கில் மாற்றி அமைக்கப்பட்ட வழிகாட்டுதல் நெறிமுறைகள் உடன் கூடிய நான்காவது கட்ட ஊரடங்கு குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சில மாநிலங்களில் கொரொனா தாக்கம் முழுவதுமாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
சில மாநிலங்களில் கொரொனா தாக்கம் மிகக் குறைந்த அளவிலேயே உள்ளது. 10க்கும் மேற்பட்ட மாநிலங்களில் மட்டுமே கொரொனா தாக்கம் தீவிரமாக உள்ளது. இவ்வாறு ஒவ்வொரு மாநிலங்களும் ஒவ்வொரு விதமாக இருக்கக் கூடிய சூழலில், அனைத்து மாநிலத்திற்கும் ஒரு பொதுவான வழிகாட்டுதல் நெறிமுறைகள் என்பது சரியாக இருக்காது என்று கருத்து நிலவுகிறது.
ஏற்கனவே 14 விதமான நடவடிக்கைகள் மேற்கொண்டு நாடு முழுவதும் மத்திய அரசு சிலவற்றை தடை செய்தது. அதில் ரயில் போக்குவரத்து, விமானப் போக்குவரத்து, ஷாப்பிங் மால்கள் ஐ திறக்க கூடாது என்கிற கட்டுப்பாடுகள் உள்ளது. எனவே நான்காவது கட்ட ஊரடங்களின் போதும் சிவப்பு நிறமுடைய பல்வேறு பகுதிகளில் இந்த 14 விதமான கட்டுப்பாடுகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக கோவில்களை திறப்பது ஆகிய கட்டுப்பாடுகளை தவிர மற்ற கட்டுப்பாடுகள் அனைத்தும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பச்சை, மற்றும் ஆரஞ்சு மண்டலங்களில் முழுவதுமான தொழில் நடவடிக்கைக்கு அனுமதி அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.