தமிழகத்தில் நேற்று டாஸ்மாக்கில் மது விற்பனை 163 கோடி ரூபாய் மதுரை மண்டலம் தொடர்ந்து முதலிடம் !
கொரோனா தொற்று பரவாமல் தடுக்க ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்ததால் டாஸ்மாக் கடைகள் 43 நாள்கள் மூடப்பட்டிருந்து.கடந்த சில தினங்களுக்கு முன்பு மீண்டும் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது அதனைத் தொடர்ந்து நீதிமன்றம் டாஸ்மாக் கடையை மூட உத்தரவிட்டது.அதனைத் தொடர்ந்து தமிழக அரசு மேல்முறையீடு செய்தது சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம்.இந்நிலையில் நேற்று முன்தினம் 3700 டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன.
தமிழகத்தில் டாஸ்மாக் நேற்றைய விற்பனை 163 கோடி ரூபாய்
சென்னை மண்டலம் ரூ. 4.2காேடி
திருச்சி மண்டலம் ரூ 40.5 காேடி
மதுரை மண்டலம் 44.7 காேடி
சேலம் மண்டலம் – 41.07 காேடி
காேவை மண்டலம் – 33 .05 காேடி என விற்பனை நடைபெற்றது. இதில் மதுரை மண்டலம் முதலிடம் பெற்றுள்ளது. மேலும் ஏற்கனவே திறக்கப்பட்ட போதும் மதுரை மண்டலம் முதலிடம் பெற்றது குறிப்பிடத்தக்கது.






