இராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி தொடங்க அரசு ஆணை வழங்கி உள்ளன.மேலும் அடிக்கல் நாட்டு விழா தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களால் நடைபெற்றது இதனையடுத்து மருத்துவ கல்லூரி கட்டிட பணிகள் தொடங்கின.இந்நிலையில் இராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் சுத்தம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த பணியில் பெரிய ராட்சத இயந்திரங்கள் மற்றும் ஜேஜிபி எந்திரங்களை கொண்டு பெரிய அளவில் பள்ளம் தோண்டி வருகின்றனர். இந்த பள்ளத்தில் இருந்து எடுக்கும் மணல்களை மருத்துவமனை வளாகத்தின் சுற்றுச் சுவரின் அருகில் குவியாலாக குவித்து மலைகள் போல தென்படுகிறது.ஏற்கனவே சுற்றுச் சுவர் இடியும் தருவாயில் இருப்பதால் எப்போது வேண்டுமானாலும் சுவர் இடியக்கூடும் என்று கருதப்படுகிறது.
மேலும் இந்த சுவர் ஒருவேளை இடிந்து விட்டால் உயிர் பழி ஏற்படக்கூடும் என்று அஞ்சப்படுகிறார்கள் 24-வது வார்டு காந்தி நகர் மக்கள்.இந்த மக்கள் நலன் கருதி மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.கடந்த சில தினங்களுக்கு முன்பு இப்பகுதியில் சுவர் இடிந்து விழுந்ததில் சிறுவன் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.