மருத்துவப் பணியாளர்கள் 845 பேரை சவூதிக்கு அனுப்ப மத்திய அரசு ஏற்பாடு!

சவுதி அரேபியாவில் கொரொனா சிகிச்சை அளிக்க ஏதுவாக இந்திய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் 835 பேரை அனுப்பி வைக்கும் ஏற்பாட்டை மத்திய அரசு செய்திருக்கிறது. இவர்கள் விடுமுறைக்காக இந்தியா வந்து ஊரடங்கால் திரும்பி செல்ல முடியாத நிலைமையில் இருந்தனர். இதனையடுத்து சவுதி அரசு விடுத்த வேண்டுகோளை அடுத்து இவர்களில் முதல் குழுவினர் கொச்சியில் இருந்து சவுதி விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

 

வரும் 16, 20 மற்றும் 23ம் தேதிகளில் சவுதி விமானம் மூலம் எஞ்சியவர்கள் அழைத்து செல்லப்படுகிறார்கள். ஏற்கனவே ஐக்கிய அரபு எமிரேட் அரசின் கோரிக்கையை ஏற்று இந்தியாவில் சிக்கிய மருத்துவப் பணியாளர்களை மத்திய அரசு சிறப்பு விமானத்தில் அனுப்பி வைத்தது குறிப்பிடத்தக்கது.


Leave a Reply