--- --:--:-- --

வாகனத்தை நிறுத்தாமல் சென்ற இளைஞர் சுட்டுக் கொன்ற சி‌ஆர்‌பி‌எஃப் வீரர்!

10

காஷ்மீரில் சோதனைச்சாவடியில் வாகனத்தை நிறுத்தாமல் சென்ற இளைஞனை ராணுவத்தினர் சுட்டுக் கொன்றனர். குட்கா மாவட்டத்தில் வாகமன் போலீஸ் நிலைய எல்லையில் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டு இருந்தது.

 

இந்த நிலையில் அங்கு வந்த வாகனத்தை சிஆர்பிஎஃப் வீரர்கள் மறித்ததாகவும் ஆனால் வாகன ஓட்டுநர் எச்சரிக்கையை மீறி வாகனத்தை இயக்கியதால் பாதுகாப்பு கருதி சுட்டுக் கொன்றதாகவும் சிஆர்பிஎஃப் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ஆனால் கொல்லப்பட்ட இளைஞனின் தந்தை இதனை மறுத்துள்ளார். மேலும் சம்பவத்தை நேரில் கண்ட ஒருவர் வாகன ஓட்டியை பாதுகாப்பு படையினர் வேண்டுமென்றே சுட்டுக் கொன்றதாக கூறியதால் குட்கா மாவட்டத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon