--- --:--:-- --

டெஸ்லா கார் தொழிற்சாலையில் உற்பத்தியை தொடங்க டிரம்ப் அனுமதி!

17

டெஸ்லா கார் தொழிற்சாலையில் உற்பத்தியை தொடங்க அனுமதிக்க வேண்டும் என கலிபோர்னியா மாநில அரசை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கேட்டுக்கொண்டுள்ளார்.

 

அமெரிக்காவில் மார்ச் மாதத்தில் இருந்து ஊரடங்கு உள்ள நிலையில், கலிபோர்னியாவின் ப்ரீமாண்டில் உள்ள டெஸ்லா தொழிற்சாலையை திறந்து உற்பத்தியை தொடங்கப் போவதாக அதன் தலைவர் எலோன் மஸ்தெரிவித்தார்.

 

ஒரு வாரம் கழித்து நிலைமை ஆய்வு செய்த பின்னரே அனுமதி அளிப்பது பற்றி பரிசீலிக்க முடியும் என்று அலெமேடா கௌண்டி நிர்வாகம் அறிவித்தது. மீறி தொழிற்சாலையை திறந்தால் எலோன்மஸ் கைது செய்யப்படுவார் என எச்சரித்துள்ளது.

 

அதில் எலோன்மஸ்க்கு ஆதரவாக அதிபர் டொனால்ட் டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார். அதில் டெஸ்லா தொழிற்சாலையை திறக்க கலிஃபோர்னியா அரசு அனுமதிக்க வேண்டும் என்றும் இது விரைவாகவும் பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon