மதுரை மாவட்டத்தில் சிலைமான் காவல் சரகம் விரகனூர் காளியம்மன் கோவில் தெருவில் வசிக்கும் ஆதரவற்ற ஏழை, எளியோர்கள் வாழ்வாதாரத்திற்கு மிகவும் சிரமப்படுகின்றனர் என்ற தகவல் அறிந்த மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நெ.மணிவண்ணன் மேற்கண்ட 48 குடும்பங்களுக்கு தலா 5 அரிசி மற்றும் 15 வகையான காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை சிலைமான் காவல் ஆய்வாளர் மாடசாமி, சி.சார்பு ஆய்வாளர் கணேஷ் குமார், காவலர்கள் ரமேஷ், பாண்டி, கண்ணன் மற்றும் பகுதி செயலாளர் மகேந்திரன் ஆகியோர் மூலமாக அத்தியாவசிய பொருட்களை பயனாளிகள் வீட்டிற்கு நேரடியாக சென்று வழங்கி உதவி செய்தார்.
மேலும் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பஞ்சாயத்திற்கு உட்பட்ட ஏழை, எளிய மக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் 210 பேருக்கு அரிசி, பருப்பு, பிஸ்கட், மற்றும் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை ADSP கணேசன் ஏற்பாட்டின் பேரில், மதுரை காவல் சரக DIG.ஆனி விஜயா தலைமையில், சமயநல்லூர் DSP ஆனந்த் ஆரோக்கியராஜ், அலங்காநல்லூர் காவல் ஆய்வாளர் நிர்மலா, மேல சென்னம்பட்டி அன்னை பழனியம்மாள் அறக்கட்டளையை சேர்ந்த Dy. Collector (Rtd)ருக்மணி, அலங்காநல்லூர் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் முருகேஸ்வரி, முடுவார்பட்டி நல்லியப்பன், சம்பத், செளந்தர ராஜன், ஜோதி முருகன், செங்கோடன் மற்றும் சுப்பிரமணி ஆகியோர் மூலமாக வழங்கி உதவி செய்தனர். மேலும், கொரோனா வைரஸ் நோய் தொற்றிலிருந்து பாதுகாப்பாக இருக்குமாறு முகக்கவசம் வழங்கி விழிப்புணர்வு செய்தனர்.