--- --:--:-- --

எண்ணெய் ஏற்றிச் சென்ற லாரியில் துளை..! குடங்களில் பிடித்துச் சென்ற பொதுமக்கள்!

8

சேலம் மாவட்டம் ஆத்தூரில் சமையல் எண்ணெய் ஏற்றி வந்த டேங்கர் லாரியில் ஓட்டை விழுந்ததால் எண்ணெய் சாலையில் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. சென்னை துறைமுகத்திலிருந்து பெருந்துறை நோக்கி டேங்கர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. ஆத்தூர் அருகே வந்தபோது வேகத்தடை மீது லாரி ஏறி இறங்கியது.

 

அப்போது லாரி சேதமடைந்து அதிலிருந்த நான்காயிரத்து 500 லிட்டர் எண்ணெய் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் காலி குடங்களுடன் எண்ணெய்யை பிடித்து சென்றனர். தகவல் அறிந்த அதிகாரிகள் அதை பயன்படுத்த முடியாது என்பதால் சாக்கடைக்குள் திருப்பி செல்ல வாய்க்கால் அமைத்தனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon