மெஹ்பூபா முப்தியின் வீட்டுச் சிறை 3 மாதங்களுக்கு நீட்டிப்பு!
ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முப்தியின் தடுப்புக்காவல் மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைதாகியுள்ள மெகபூபா முப்தி கடந்த ஆகஸ்ட் மாதம் ஐந்தாம் தேதி முதல் சிறை வைக்கப்பட்டுள்ளார்.
வீட்டிலேயே சிறை வைக்கப்பட்டிருந்த மெகபூபா முப்தியின் காவல் முடிவடைந்த நிலையில் ஸ்ரீநகர் மாவட்ட நீதிபதி ஆணைப்படி அவருடைய சிறைவாசம் மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட எட்டு மாதங்களாக வீட்டுச் சிறையில் அவர் அடைக்கப்பட்டு உள்ளார்.
அவர் மீதும் ஓமர் அப்துல்லா, பரூக் அப்துல்லா மீது பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது. இதில் மற்ற இருவரும் விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில் மெகபூபா முப்தியின் காவல் மட்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது. அரசு நடவடிக்கைக்கு உமர் அப்துல்லா கண்டனம் தெரிவித்துள்ளார்.






